Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

Kollayane Veliyeru Protest is all about people questioning the Corrupt. Are you read to question?

Kollayane Veliyeru Protest is all about people questioning the Corrupt. Are you read to question?

ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் மக்கள் கூட்டம். நீங்கள் கேள்வி கேட்க தயாரா? மார்ச் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம் வாருங்கள்.

1500CrRationCorruption

ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY

March 15 | Kollayane Veliyeru | Ration Scam Protest | Valluvar Kottam

March 15 | Kollayane Veliyeru | Ration Scam Protest | Valluvar Kottam

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதில் 1500 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை பற்றி மேடை போட்டு பேசலாம் வாருங்கள். ஊழல் பற்றிய விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY March 15 கொள்ளையனே_வெளியேறு 1500CrRationCorruption

Join Arappor Ward Leader Programme & Become a Councilor in your Area!

Join Arappor Ward Leader Programme & Become a Councilor in your Area!

Register here to join one day training program to learn solving people's issues in Chennai Corporation wards. http://bit.ly/ward-leadership-training

தேர்தலில் நிற்காமல் சென்னையில் வார்டு கவுன்சிலராக விருப்பமா?

  1. நீங்கள் சென்னை மாநகராட்சியில் வசிப்பவரா?
  2. உங்கள் வார்டுக்கு பொறுப்பெடுக்க நீங்கள் தயாரா?
  3. உங்கள் வார்டின் மக்கள் பிரச்சனையை தீர்க்கவும் ஊழலை வெளிக்கொணர்வதற்கும் வாரம் 15 மணி நேரம் செலவிடத் தயாரா?

உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். நாங்கள் தொடர்பு கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 7200020099.

When will Opposition DMK against the 1500 Crore PDS Ration Scam?

When will Opposition DMK against the 1500 Crore PDS Ration Scam?

தமிழக ரேஷன் கடைகளில் நடைபெற்ற 1500 கோடி ஊழல் பற்றிய விவரங்கள் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு 3 வாரங்கள் கடந்து விட்டது. ரேஷன் துறை அமைச்சர் இதெல்லாம் அபத்தமான குற்றச்சாட்டு என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட்டார். முதல்வர் பழனிச்சாமி ஊழலை பாதுகாக்க வழக்கம் போல அமைதி காக்கிறார். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளும் நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த ஊழல் பற்றி பேசாமல் அமைதி காப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ...

Grama Sabhas should have powers to Pass Resolution against Tasmac

Grama Sabhas should have powers to Pass Resolution against Tasmac

நாளை காலை முதல் மாலை வரை தன்னாட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு கிராம சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்த குரல் கொடுப்போம். காவல்துறை அனுமதியுடன் நடைபெறுகிறது.

Arappors Water bodies team to audit restoration of Ponds

Arappors Water bodies team to audit restoration of Ponds

சென்னை மாநகராட்சி சுமார் 106 கோடி ரூபாய் செலவில் 47 நீர்நிலைகளை தூர் வாருவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் நமது அறப்போர் இயக்க நீர் நிலைகள் பிரிவு அந்த நீர் நிலைகள் தூர்வாருவதற்கு முன்பான தற்போதைய நிலையை ஆய்வு செய்துள்ளனர், அந்த விபரங்களை காணலாம் நீங்களும் நீர்நிலைகள் பிரிவில் இணைந்து செயல்பட விரும்பினால் பதிவு செய்ய: http://bit.ly/API_WaterBodiesTeam Register in the above link to join Arappor waterbodies team to monitor the restoration works of ponds in Chennai by Chennai Corporation at the cost of 106 crores.

Arappor's RTI plea on SWD upheld

Arappor's RTI plea on SWD upheld

சென்னை முழுவதும் பல கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் போடுவதற்கு டெண்டர்கள் கொடுத்த சென்னை மாநகராட்சி அந்த வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்திருந்தது.

அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த தகவல்கள் அனைத்தையும் CD வடிவில் கொடுக்குமாறு மாநில தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News: https://m.timesofindia.com/city/chennai/arappors-rti-plea-for-report-on-stormwater-drains-upheld/amp_articleshow/74059713.cms
Why is the CM not questioning the 1500 Crore PDS Scam

Why is the CM not questioning the 1500 Crore PDS Scam

அமைச்சர் காமராஜ், சுதா IAS, கிறிஸ்டி மற்றும் 1500 கோடி ரேஷன் ஊழல்.

அப்பட்டமாக நடைபெறும் இந்த ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு 2 வாரங்கள் கடந்த பிறகும் தமிழக முதல்வர் இந்த ஊழல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது அவருக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அமைதியாக இருந்தால் ஊழலை மறைத்து விடலாம் என்று நினைக்கிறாரா?

1500CrPdsScam

Video: https://youtu.be/Pfe5VrmWPQY
Ramamohan Rao's 520 Crore Scam remembered

Ramamohan Rao's 520 Crore Scam remembered & His Political Aspirations

அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளர்கள் டெண்டர்களில் ராம் மோகன் ராவின் நெருக்கமானவர்களுக்கு விதிகள் மாற்றப்பட்டு டெண்டர்கள் வழங்கப்பட்டதும் அவர்கள் குறைந்த ஆட்கள் பணியில் அமர்த்தி அதிக ஆட்களுக்கு பணம் பெற்று ஊழல் செய்ததையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை 3 வருடங்களாக ஆரம்பக்கட்ட விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள்!. இவரை போன்ற அதிகாரிகள் சாதி மற்றும் அரசியல் வைத்து ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவரை போன்றவர்கள் அரசியல

Arappor Corporation Gym Audit

Arappor Corporation Gym Audit

சென்னை மாநகராட்சியின் 156 gymகளையும் கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறப்போர் இயக்கத்துடன் இணையுங்கள். நாளை மாலை 5 மணிக்கு சந்திப்போம். Register at http://bit.ly/Gym_Audit2020