Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

Arappor's Know Your Rights program on Jan12th at 5 PM

Arappor's Know Your Rights program on Jan12th | 5 PM | Mogappair

Join us this Saturday 5pm to know how to solve various issues in your Ward.

இந்த வாரம் நடைபெறும் இரண்டு அறப்போர் நிகழ்வுகள்.

  1. உங்கள் வார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி நடைபெறும் Know Your Rights நிகழ்ச்சி அம்பத்தூர் முகப்பேர் கோயம்பேடு பகுதி மக்களுக்காக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு முகப்பேர் பகுதியில் நடைபெறுகிறது.
Register here: http://bit.ly/arappor-know-your-rights-registration
  1. சென்னையில் உள்ள 47 நீர்நிலைகளை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆவணப்படுத்த விருப்பம் உள்ளவர்கள் ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலு
Arappor asks for SIT investigation into Minister Velumani's case

Arappor asks for SIT investigation into Minister Velumani's case

ஒரு வருடமாக முதல்கட்ட விசாரணையை கூட முடிக்க முடியாத DVAC மீது நம்பிக்கை இல்லை. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/sit-must-investigate-corruption-allegations-against-velumani/article30507432.ece

Chennai Corporation Corruption Tender Scam Collusion in Tenders

How to become a ward councillor without contesting elections?

How to become a ward councillor without contesting elections?

தேர்தலில் நிற்காமல் சென்னையில் வார்டு கவுன்சிலராக விருப்பமா?

  1. நீங்கள் சென்னை மாநகராட்சியில் வசிப்பவரா?
  2. உங்கள் வார்டுக்கு பொறுப்பெடுக்க நீங்கள் தயாரா?
  3. உங்கள் வார்டின் மக்கள் பிரச்சனையை தீர்க்கவும் ஊழலை வெளிக்கொணர்வதற்கும் வாரம் 15 மணி நேரம் செலவிடத் தயாரா? அறப்போர் ஒரு நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு உங்கள் சமூக பயணத்தை துவங்குங்கள்.
Register here: http://bit.ly/ward-leadership-training
People attend Arappor's New Year PotLuck

People attend Arappor's New Year PotLuck

அறப்போர் இயக்கத்தின் கூட்டாஞ்சோறு சந்திப்பு நடைபெற்று வருகிறது.

WitchHunt against Arappor by Commissioner Viswanathan in Times Of India

WitchHunt against Arappor by Commissioner Viswanathan reported in Times Of India

சென்னையின் காவல்துறை ஆணையர் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் பாகிஸ்தான் தொடர்பு என்றும் கூடவே அறப்போர் இயக்கம் என்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கதை சொல்கிறார். ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரி இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா?

இவர் சொல்லிய பாகிஸ்தான் கதையை கேட்டு இன்று தமிழக மக்கள் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சிரிப்பாய் சிரிப்பதற்கு முன்பு தமிழக காவல்துறையின் மானத்தை காப்பாற்ற தமிழக டிஜிபி சென்னை ஆணையர் விஸ்வநாதன் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

https:/...
Satta Panchayat Iyakkam calls to Dismiss Commissioner Viswanathan

Satta Panchayat Iyakkam calls to Dismiss Commissioner Viswanathan on the WitchHunt Against Arappor Iyakkam

#DismissViswanathan

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள சென்னை போலீஸ் கமிஷனர் திரு.A.K.விஸ்வநாதன்.I.P.S அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரி புகார் மனு..

கடந்த 02.01.2020 அன்று அறப்போர் இயக்கம் என்ற சமூக நல இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் சென்னை காவல்துறை ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட செய்தி ஒன்றினைப் படித்தேன். அதில் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து அறவழிப்போராட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு 20-6-2019 அன்று ஆணையரைச் சந்தித்த அ

People are Arappors biggest supporters.

People are Arappors biggest supporters. Welcome to Potluck on Sunday Jan 5th at 6PM

அறப்போர் இயக்கம் ஒரு RSS இயக்கம் என்று ஒரு குரூப் சொல்லுது. அறப்போர் இயக்கம் திமுகவிடம் பணம் வாங்குவதாக ஒரு குரூப் சொல்லுது. அறப்போர் இயக்கம் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக ஒரு குரூப் சொல்லுது. காவல்துறை அறப்போர் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள். அமைச்சர் அறப்போர் மீது வழக்கு தொடுக்கிறார்.

இவை அனைத்தையும் மீறி மக்களாகிய நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவு தான் எங்களின் பெரிய பலம். இந்த புதிய ஆண்டு நமக்கு மேலும் சவாலாக இருக்க போகிறது. அரசாங்கத்தின் இத்தனை அடக்குமுறைகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களின் அவதூறுகள் என அ

Why did Commissioner bring up Arappor's name - Jayaram Venkatesan

Why did Commissioner bring up Arappor's name - Jayaram Venkatesan

கமிஷனர் சார் நீங்க ஏன் சார் அறப்போர் பெயரை சொன்னீங்க? இதுக்காக தானா..?

இன்னும் என்னவெல்லாம் நீங்கள் அவதூறு பரப்பினாலும் ஊழலுக்கு எதிரான எங்கள் பயணத்தை தடுக்க முடியாது சார். அறப்போர் தொடரும் சார்..🙂

Watch video here: https://www.youtube.com/watch?v=68o3_S2UBBM
Arappor Press Release Condemning Police Commissioner Vishwanathan for his comments on Arappor

Arappor Press Release Condemning Police Commissioner Vishwanathan for his comments on Arappor

சென்னை காவல் ஆணையர் திரு A.K விஸ்வநாதன் 01/01/2020 அன்று நடந்த பத்திரிக்கை சந்திப்பில் கோலம் பற்றிய போராட்டத்தை பற்றி பேசும் பொழுது தேவை இல்லாமல் அறப்போர் இயக்கம் பெயரை குறிப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. மக்கள் மனதில் அறப்போர் இயக்கத்திற்கு பாக்கிஸ்தானோடு தொடர்பு இருக்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே இதை செய்ததாக தெரிகிறது.

போராடிய பெண் காயத்ரி அவருடைய முகநூலில் போட்ட ஒன்றை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஏதோ பெரிதாக கண்டுபிடித்தது போல சொன்னது வேடிக்கையானது. இரண்டாவது கோலம் போட்டு போராடிய அந்த கு

Arappor Potluck 2020

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை நாம் இணைந்து துவக்கும் வகையில் வருகிற ஞாயிறு அன்று அறப்போர் அலுவலகத்தில் #கூட்டாஞ்சோறு சந்திப்பு நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் இருவருக்கு சாப்பாடு கொண்டு வந்து அதை அனைவரும் பகிர்ந்து சாப்பிட இருக்கிறோம். அறப்போர் தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Potluck #Arappor 2020

Bring food for 2 people and share it with others to celebrate this New year. Let us all Arappor volunteers and supporters join this Sunday at Arappor office at 120 A, Rukmani Lakshmipathi Salai Near Egmore Govt Eye hospital. Contact 7200020...