அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தை காக்கவும் தொடர்ந்து வேலை செய்து வருவது தாங்கள் அறிந்ததே. கடந்த மாதம் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்(TNCSC) ரேஷன் கடைகள் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ 1480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் CBI யில் புகார் கொடுத்துள்ளோம். தாங்கள் இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சிக்கும் உணவு துறைக்கும் அழுத்தம் தரும் படி வேண்டுகிறோம்.
இதற்கு உணவு துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் ...