கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் ரூ 2௦௦௦ கோடி தகவல் தொழில்நுட்பத்துறை டெண்டரில் செட்டிங்

PR Tamil cover.jpg

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் ரூ 2௦௦௦ கோடி தகவல் தொழில்நுட்பத்துறை டெண்டரில் செட்டிங் மற்றும் ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த டெண்டர்களில் செட்டிங் செய்ய மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் மத்திய அரசின் தொலை தொடர்பு செயலாளர், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் காம்படிஷன் கமிஷனிடம் புகார் அளித்துள்ளது.

பாரத் நெட் திட்டம் என்பது பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் கொண்டு போய் சேர்க்கும் திட்டம். இதை செயல்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் கீழே இயங்கும் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிட். ரூ 1950 கோடி மதிப்புள்ள டெண்டர்களை 4 டெண்டர்களாக டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் வெளியிட்டனர். இந்த டெண்டர்கள் மற்றும் அதன் நிபந்தனை விதிகள் அனைத்தும் தலைமை செயலாளர் மற்றும் 15 IAS அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 6 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்த டெண்டர்கள் பலர் போட்டிபோடும் வண்ணம் செயல்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் ஜனவரி மாதம் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் திரு சந்தோஷ் பாபு அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டுள்ளார் என்றும் அவரை டெண்டர் விதிகளில் பெரிய மாற்றங்கள் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பாக ஓரிரு நிறுவனங்களுக்கு சார்பாக மாற்றங்கள் செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. சில நாட்களில் அவரை Handicrafts துறையின் இயக்குனராக மாற்றி திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா IAS அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அதே போல் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிட் இயக்குநரான திரு சண்முகம் அவர்களும் மாற்றப்பட்டு திரு ரவிச்சந்திரன் IAS அவர்கள் கொண்டுவரப்பட்டார். இந்த மாற்றத்தை திரும்ப பெற கோரியும் டெண்டர் நேர்மையாக நடைபெற கேட்டும் அறப்போர் இயக்கம் 28/01/2020 அன்று தலைமை செயலாளருக்கு மனுவும் அனுப்பியது. இந்த டெண்டர்களை தொடர்ந்து கண்காணித்தும் வந்தோம்.

மீடியாவின் பார்வை இதன் மீது இருந்ததால் எந்த மாற்றமும் செய்யாமால் அதே நேரத்தில் டெண்டரையும் முடிக்காமல் டெண்டரின் இறுதி நாட்களை ஒவ்வொரு மாதமும் தள்ளிக்கொண்டே போனார்கள். தமிழ்நாடு கோரோனாவால் பாதிக்கப்பட்டு அனைவரின் கவனமும் அதன் மீது இருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று ஏப்ரல் 15 அன்று மிகப்பெரிய மாற்றங்கள் சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பங்கு பெற விரும்பும் நிறுவனங்களின் குறைந்த பட்ச TURNOVER தேவையும் அனுபவ தேவையும் 300% அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பேக்கேஜ் B டெண்டரில் கடந்த 3 வருடங்கள் சேர்த்து ரூ 615 கோடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடந்த 3 வருடங்களில் சராசரியாக வருடத்திற்கு ரூ 615 கோடி இருக்க வேண்டும் என்று மாற்றியுள்ளனர். அதே போல் ஆப்டிகல் பைபர் பதித்த அனுபவமும் கடந்த 3 ஆண்டுகள் சேர்த்து ரூ 204 கோடி மதிப்பிற்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு வருடமும் ரூ 204 கோடி மதிப்பிற்கு அனுபவம் இருக்க வேண்டும் என்று மாற்றியுள்ளனர். இது போல் 4 பேக்கேஜ் டெண்டர்களிலும் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

டெண்டர் மாற்றங்கள் (Corrigendum) என்பது சிறிய மாற்றங்கள் செய்யவே. இவ்வளவு பெரிய மாற்றங்கள் செய்வது புதிய டெண்டருக்கு சமானம். மேலும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இந்த முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. தலைமை செயலாளர் மற்றும் 15 IAS அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு டெண்டரை அவர்கள் சம்மதம் இல்லாமலே தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றுவது சட்ட விரோதமானது. மேலும் இந்த மாற்றங்கள் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் இலக்கான ஆரோகியமான போட்டிக்கு எதிரானது. மேலும் குறிப்பிட்ட 2 பெரிய நிறுவனங்கள் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.

டெண்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள் கீழே காணலாம்

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

உலகமே கொரோனாவால் பாதிக்கப்ட்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்று டெண்டர் ஊழல்கள் நடக்க ஏற்பாடுகள் செய்வது நியாயமா ? உடனடியாக இந்த டெண்டர் ஊழல் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். எனவே அறப்போர் இயக்கம் கீழ்கண்ட கோரிக்கைகளை எங்கள் புகார் மனுவில் அளித்துள்ளோம்.

  1. டெண்டர் மாற்றங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்

  2. இந்த மாற்றங்களுக்கு காரணமான தகவல் தொழில்நுட்ப செயலர் திரு ஹன்ஸ் ராஜ் வர்மா IAS மற்றும் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிட் இயக்குநரான திரு ரவிச்சந்திரன் IAS அவர்கள் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்

  3. இதற்கு காரணமான திரு ஹன்ஸ் ராஜ் வர்மா IAS, திரு ரவிச்சந்திரன் IAS மற்றும் காரணமான மற்ற பொது ஊழியர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் துறை நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்றப் பிரிவு வழக்குகள்

PDF வடிவில் பத்திரிக்கை செய்தியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் http://bit.ly/2000CroreTenderSettingTamilPressReleasePDF அறப்போர்