2.5 Crore budget allocated Chennai Corporation gym missing.

இரண்டரை கோடிக்கு GYMக்கு பட்ஜெட் ஒதுக்கி இருக்கு. ஆனா அந்த Gym எங்கே இருக்கு?

மாதவரம் கோ.சு.மணி தெருவில் அந்த பகுதி இளைஞர்களுக்காக ஜிம் துவங்க மாநகராட்சி சார்பில் 2.5 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2015ல் ஒரு முறையும் 2017ல் ஒரு முறையும் திறப்பு விழா நடத்தப்பட்டு விட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு இந்த ஜிம் பற்றிய எந்த தகவலும் இல்லை. மாநகராட்சி குறிப்பிட்ட கட்டிடத்தில் ஜிம் நடத்துவதற்கு எந்த உபகரணங்களும் இது வரை வாங்கி வைக்கப்படவில்லை.

இந்த விஷயத்தை தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றுக் கொண்ட அறப்போர் வார்டு குழு பத்திரிகை செய்தி மூலம் வெளியே கொண்டு வந்தது.'

'

News: https://timesofindia.indiatimes.com/…/articles…/73001781.cms

இந்த செய்தி இன்று வெளிவந்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் வரிசையாக அந்த பகுதிக்கு படையெடுத்து சென்று GYM எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பகுதி மக்கள் அவர்களை மடக்கி கேள்விகள் கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் முழித்த அதிகாரிகள் உடனடியாக Gym துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்து சென்றுள்ளனர்.

அறப்போர் தொடரும். We are Watching.