# AIADMK's Killer Flag Poles

FlagPostKillers #ADMK

இன்று காலை 7 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோ. இடம்: பாலாறு பாலம் மற்றும் செங்கல்பட்டு சுங்கச்சாவடி இரண்டிற்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை.

இதே போல சாலையில் வைக்கப்பட்ட அதிமுக கொடி கம்பங்களால் ஏற்பட்ட விபத்தில் கோவையில் ஒரு பெண் தன்னுடைய ஒரு காலை இழந்து மேலும் சிகிச்சை பெற, தன்னுடைய வயதான பெற்றோரை கவனிக்க பணம் இல்லாமல் மக்களிடத்தில் அவரது குடும்பம் உதவி கேட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த பெண்ணை சந்தித்து ஆறுதல் சொல்ல கூட முடியாத அதிமுக அரசியல்வாதிகள் இந்த கொடிய செயலை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

சட்டத்தை மதிக்காத, மக்களின் உயிரை மதிக்காத, வாக்களித்த மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத அதிமுக அரசியல்வாதிகளின் கொடிகள் மற்றும் பேனர்களுக்கு மக்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.

Video: https://www.facebook.com/Arappor/videos/408794193334208/