Arappor Exposes Chennai Corporations 1000 Crore Scam in River Sand!

Watch Video here: https://youtu.be/2OpNGRMNtNs

ChennaiCorruptionCorporation (English Below)

அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற, அதன் பல ஊழல்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. 2017 முதல் தமிழகத்தில் ஆற்று மண் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ஒரு கன அடிக்கு ரூபாய் 40 லிருந்து கிட்டத்தட்ட ரூபாய் 120 க்கு சென்றது. அன்று முதல் சென்னை மாநகராட்சி கான்கிரீட் சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை போன்ற அனைத்து கட்டுமானங்களிலும் ஆற்று மணலுக்கு பதிலாக M SAND தான் பயன்படுத்தி வருகிறது. M SAND ன் விலை ஆற்றுமணலில் பாதிதான். ஆற்று மணலின் விலை ஒரு கன அடிக்கு ரூபாய் 120 என்றால், M SAND ன் விலை ஒரு கன அடிக்கு ரூபாய் 50 தான். ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்ந்து ஆற்று மணலின் விலையை ஒப்பிட்டு ஒப்பந்தங்கள் வழங்கியதன் மூலம் கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி இழப்பு சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்கள் போட்டது ஆற்று மணலுக்கு. ஒப்பந்ததாரர் விலை கொடுத்ததும் ஆற்று மணலுக்கு. மாநகராட்சி அதை ஒப்பிட்டதும் ஆற்று மண் சந்தை விலைக்கு. ஆனால் கட்டுமானங்களில் பயன்படுத்தியதோ M SAND. அறப்போர் இயக்கம் இதற்கு ஆதாரமாக ஹார்லிஸ் ரோட்டில் போட்ட நடைபாதையின் மாதிரியை சோதித்ததில் அதில் M SAND தான் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளே அவர்கள் கட்டுமானங்களில் M SAND தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

கான்கிரீட் கட்டுமானங்களில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு அங்கம் M SAND. கான்கிரீட் சாலை போடும் ரெடிமிக்ஸ் M 30 வகையின் சந்தை விலை ரூபாய் 5500 தான்(per cum) (GST சேர்க்காமல்). இது வேலை செய்யும் இடத்திற்கு எடுத்து வருவது, ஆட்கூலி செலவு, Curing, finishing எல்லாம் சேர்த்து. ஆனால் இதே வேலைக்கு ரூபாய் 9000 முதல் 12000 வரை (per cum)(GST சேர்க்காமல்) ஒப்பந்ததாரர்கள் விலை quotation கொடுத்துள்ளார்கள். Negotiation க்கு பிறகும் ஒட்டுமொத்த ஒப்பந்தத்தை (Readymix component + all other components) ஒப்பிட்டு பார்க்கையில் சந்தை மதிப்பை விட கிட்டத்தட்ட 25 முதல் 30 சதவீதம் வரை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், உலக வங்கி திட்டங்கள் என செலவிட்ட ரூபாய் 4000 கோடியில் கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கு முக்கிய காரணம் மாநகராட்சியின் மேல்மட்ட அதிகாரிகள் மற்றும் சில ஒப்பந்ததாரர்கள். அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சியை மட்டுமே ஆராய்ந்துள்ளது. மற்ற உள்ளட்சிகளிலும், பொதுபணித்துறை, நெடுஞ்சாலை துறைகளிலும் இது நடந்துள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்த ஊழல் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களுக்கு தெரிவித்து 6 மாதங்கள் ஆகியும் இது வரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்பு துறைக்கும் செப்டம்பர் மாதம் இந்த ஆதாரங்களை கொடுத்துள்ளோம். PE/16/2019 ஆரம்பகட்ட விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையில் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் விசாரணையில் இல்லாததால் அறப்போர் இயக்கம் இதை விசாரிக்க உயர்நீதி மன்றத்தை நாட இருக்கிறது.

Arappor Iyakkam has been exposing scams in the Chennai Corporation with an intention to make Chennai Corporation clean and corrupt free. Our work over the last several months revealed that Chennai Corporation officials in nexus with Contractors have made huge advantage of the non-availability of river sand in 2017. Ever since, Contractors have been using M sand which is half the rate of river sand. However, Corporation continued to pay Contractors by comparing their quotes with that of river sand market rates instead of M sand, thereby causing a huge loss of around Rs 1000 crores to the exchequer over the last 3 years. Sand is a significant portion in construction of Concrete roads, Storm Water Drains, Footpath, buildings, bridges, canals etc. It must be noted that the rate of river sand from early 2017 increased from almost Rs 40 per cubic feet to all the way till Rs 150 per cubic feet and settled down in the range of Rs 110 to Rs 120 per cubic feet. In the same period from 2017 till now, the rate of M sand has been only Rs 40 to Rs 60 per cubic feet. Chennai Corporation continued to mention river sand as the sand to be used in the tender documents and compared the quotes given by Contractors with that of river sand even though in actual, M sand has been used for the Construction.

The usage of M sand has been acknowledged by the officials of the Chennai Corporation and Arappor Iyakkam has also lab tested the sample from footpath on Harleys Road laid in 2018 which showed the presence of M sand only. Readymix concrete is what is used in all these constructions in which M sand is a component and its price is readily available in the market. While the market rate of readymix M-30 component including delivery at site, labour, curing, finishing and other charges is only Rs 5500 per cubic metre without GST, the contractors have quoted around Rs 9000 to 12000 without GST for this component in most of the tenders from 2017. Even after negotiation, the prices remained significantly high. In all these tenders, the Chennai Corporation officials claimed and got approval of the council (which did not exist and Commissioner as special officer approved) saying that the final quoted rate of tenders is less than prevailing market rates by comparing with river sand whereas Arappor has found rates are in reality around 25 to 30% more than the prevailing market rates if we calculate using M sand market rates.

Out of Rs 4000 crores spent in last 3 years by Chennai Corporation including that of smart city and world bank projects, Arappor Iyakkam estimates that around Rs 1000 crores of public exchequer money has been lost. This is not possible without the active collusion of several senior officials of Chennai Corporation. It must be noted that Arappor Iyakkam has looked into Chennai Corporation alone and the same scam is said to have taken place in several Corporations, Municipalities and other local bodies. Highway Departments and Public Works Department projects also needs to be probed. A thorough investigation is needed to come out with the actual loss which could be really staggering. These issues have been brought to the notice of the current Chennai Corporation Commissioner Mr.G.Prakash IAS around June 2019. However, until date neither there has been action nor any valid explanation. Arappor Iyakkam has already submitted all our evidences to the Directorate of Vigilance and Anticorruption in September 2019 as part of the Preliminary enquiry No 16 of 2019 of DVAC initiated by Arappor Iyakkam. The Directorate of Vigilance and Anticorruption has been lackadaisical in their enquiry and Arappor Iyakkam will soon move the Madras High Court for a thorough investigation into the scam.