Attack on Arappor's Social Media accounts with Fake Copyright Claims, who are these companies and at whose behest are they doing this?

சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்திற்க்காக சில நிறுவனங்கள் நம் இயக்கத்தின் மீது எவ்வாறு பொய் புகார்கள் கொடுத்து நமது முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்குகளை முடக்குகிறார்கள் என்பதற்கு இந்த புகார் ஒரு சிறு உதாரணம். இது போல மேலும் பல பொய் புகார்கள் கொடுத்து நமது கணக்கை முடக்கி வைத்துள்ளார்கள்.

இங்கு நீங்கள் பார்ப்பது எந்த ட்வீட் மீது புகார் வந்துள்ளது என்ற விவரம். முதலில் "2018 செப்டெம்பர்" மாதம் நடைபெற்ற அறப்போர் இயக்கத்தின் பொதுக்கூட்டம் அழைப்பு குறித்த பதிவு. அடுத்த ட்வீட் தேசிய நெடுஞ்சாலையில் கட்சி கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதை எடுத்த வீடியோ. ஆனால் Copy right விதிகளை மீறியதாக அவர்கள் கொடுத்துள்ள லிங்க் அனைத்தும் பிகில் என்ற தமிழ் படத்தின் விவரங்களும் டிரைலரும். "2019 அக்டோபர்" மாதம் வெளியான இந்த படத்தின் டிரைலரை செப்டெம்பர் மாதமே காப்பி செய்துவிட்டதாக புகார். அதே போல தேசிய நெடுஞ்சாலை வீடியோவுக்கும் இந்த படத்தின் copy rights விதிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதும் தெரியவில்லை. இந்த புகாரில் மேலும் பலரது கணக்குகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் உண்மையாகவே இந்த படத்தின் வீடியோவை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அந்த புகாரில் நடுவில் அறப்போர் இயக்கத்தின் லிங்க்கையும் சேர்த்து அனுப்பி இயக்க கணக்கை முடக்க செய்யும் இந்த கோழைத்தனமான வேலைக்கு #Aiplex நிறுவனத்திற்கு பணம் கொடுப்பது யார்?


The following material has been removed from your account in response to the DMCA takedown notice copied at the bottom of this email:

Video uploaded with Tweet: https://twitter.com/arappor/status/1034422614955941889 - நாம் ஒன்று கூடி ஒற்றுமையாக கேட்காமல் இது நடக்க போவதில்லை. ஆகையால் வாருங்கள் ஒன்று கூடுவோம். செப் 23 மாலை 4.30 மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டம்.

EnnangaSaarUngaSattam https://t.co/0TVQf6xNOZ

Video uploaded with Tweet: https://twitter.com/arappor/status/1195542246835159041 - சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே 15 நவம்பர் மதியம் 1 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோ. இந்த கம்பங்களில் எந்த கொடி பறந்தாலும் கீழே விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆளுங்கட்சி கொடியை மட்டும் தான் குற்றம் சொல்லனுமா என்ன? #DMK https://t.co/YX5Z92oXdu

== Links to original work: https://en.wikipedia.org/wiki/Bigil https://www.imdb.com/title/tt9260636 https://www.youtube.com/watch?v=GR-Ui8-V2M0

Copyright owner: AGS Entertainment Company: Aiplex Software Private Limited