CBI, DVAC, Politicians & Parties cannot hear the people

ரேஷன் கடைகளுக்கு வாங்கப்படும் சர்க்கரை பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை சந்தை விலையை விட அதிகமான விலைக்கு தமிழக அரசால் கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது என்று அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் கடந்த ஜனவரி 24 அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி CBIல் புகாரும் அளித்துள்ளது.

25 நாட்கள் கடந்த நிலையில் இந்த ஊழல் பற்றி இது வரை எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை. கொடுத்த புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்த கொள்ளையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மக்கள் வரிப்பணம் வீணாக போவது பற்றி யாருக்கும் கவலை இல்லை. இந்த 1500 கோடி வீணாக போகாமல் இருந்தால் ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்ற புரிதலும் ஏற்படவில்லை.

ஆனால் அமைதியாக இருப்பதின் மூலமும் மற்றவர்களை அமைதியாக இருக்க வைப்பதின் மூலமும் இந்த ஊழலை மறைத்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அறப்போர் இயக்கம் வெளிப்படுத்தும் அனைத்து ஊழல்களிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சட்டப்படி இந்த போராட்டத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருப்போம். தமிழக மக்கள் துணை நிற்பார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த ஊழலை மக்களிடையே கொண்டு போவார்கள்.

ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY

1500CrPdsScam