சென்னை முழுவதும் குடிநீர் லாரிகளை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 600 ரூபாய்க்கு விற்ற ஒரு லாரி குடிநீர் தற்பொழுது 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிக பணம் கொடுப்பவர்களுக்கே தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தண்ணீர் மாஃபியா கும்பல் கொள்ளை அடித்து வருகிறது. குடிசை மாற்று குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வாரம் ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மழை பெய்யும் போது தண்ணீரை சேமிக்க எந்த ஒரு சிறிய முயற்சியும் எடுக்காத சென்னை மெட்ரோ வாட்டர் சேர்மன் மற்றும் அமைச்சர் வேலுமணி 6 மாத கால தேவைக்கு தண்ணீர் இருப்பதாக கூறி தினம் ஒரு குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பதாக டிவியில் பேட்டி கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்.

வறண்டு கிடக்கும் ஏரிகளையும் குளங்களையும் இப்பொழுது தூர் வாரினால் தான் அடுத்த மழைக்கு தண்ணீர் வீணாக கடலுக்கு போய் கலப்பதை தடுக்க முடியும். ஆறுகளிலும் கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதை தடுத்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீரின் நச்சுத்தன்மையும் குறையும். ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே அமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான காரணத்தை நாங்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா..?

62381083_1402020899936938_7837142398286168064_n.jpg