Come be a part of Arappor's Road Audit Team

Register here to join Arappor road audit team: http://bit.ly/API_RoadAuditTeam

சென்னை மாநகராட்சியில் புதிய சாலைகள் போடுவதற்கு முன்பு பழைய சாலைகளை அகற்றி பழைய சாலையின் உயரத்திற்கு மேல் போகாமல் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்று சாலை டெண்டர் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இந்த விதி முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை உறுதி செய்வதற்காக அறப்போர் வார்டு குழுவினர் புதிதாக போட இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து அதன் தற்போதைய உயரத்தை கணக்கெடுத்து குறித்து வருகின்றனர். இதன் மூலம் புதிய சாலைகள் உயரம் அதிகமாகி வீடுகள் பள்ளத்தில் தள்ளப்படுவது தடுக்கப்படும். உங்கள் பகுதியில் புதிய சாலைகள் போடப்படும் போதும் இந்த விதியை பின்பற்றுகிறார்களா என்று உறுதி செய்யுங்கள். அறப்போர் குழுவுடன் இணைந்து ஆய்வு பணிகளை எவ்வாறு செய்வது என அறிந்து கொள்ளுங்கள்.