Is this the "Friendly behavior" of the Chennai Police?

ஒரு குறுகிய சாலையில் தண்ணீர் லாரிகள் தினமும் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக 100ல் அழைத்து புகார் அளித்தால் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரின் முகவரியை கேட்பதும் புகார் அளித்தவரை நேரில் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் ஏன்?

அறப்போர் இயக்க தன்னார்வலர் ஒருவருடன் காவலர் பேசும் ஆடியோ. முதலில் பொறுமையாக ஆரம்பிக்கும் காவலர் கடைசியில் வாடா போடா வாயா போயா என்று மரியாதை குறைத்து கோபத்துடன் பேசுவது சரியா?

10 நிமிட ஆடியோ 4 நிமிடங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இதை கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வீடியோவை பார்க்கும் உளவுத்துறை உங்கள் உயர் அதிகாரிகளுக்கு இதை அனுப்பி அந்த காவலருக்கு தகுந்த ஆலோசனை வழங்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Audio Link of the Conversation: https://www.youtube.com/watch?v=A8oGuKpWIrA