904576b2-bab8-41be-8619-971afe2acc1e.jfif

நேற்று முதல் IIT ல் மாணவி தற்கொலை விஷயத்தில் 3 பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் சுதர்ஷன் பத்மநாபன் என்னும் பேராசிரியர் அறப்போர் இயக்க நிர்வாகி என்று ஒரு செய்தி இணையதளத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க அலுவலகத்தில் நடந்த ஒரு பத்திரிக்கை சந்திப்பில் பங்கெடுத்த புகைப்படமும் பரப்பப்பட்டு வருகிறது. சுதர்ஷன் பத்மநாபன் அறப்போர் இயக்க நிர்வாகி என்பதில் துளி அளவும் உண்மை கிடையாது. அறப்போர் இயக்கம் தேர்தல் நேரங்களில் ஜனநாயக சீர்திருத்த அமைப்புடன் (Association for Democratic Reforms) சேர்ந்து அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மற்றும் குற்ற பின்னணி குறித்து வெளியிடுவோம். எனவே அவர் ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் பிரதிநிதியாக பத்திரிகை சந்திப்பில் கலந்து கொண்டார். மேலும் அறப்போரின் சில பொது நிகழ்வுகளுக்கும் அவர் வந்துள்ளார். இது அனைத்தும் பத்திரிகை நண்பர்களுக்கும் தெரியும். எனவே சுதர்ஷன் அறப்போரின் நிர்வாகி அல்லது முக்கிய நிர்வாகி என்பது உண்மைக்கு புறம்பானது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க கோருவது அவசியம். காவல்துறை நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தி அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அறப்போரின் நிலைப்பாடு.

From yesterday, there have been allegations that there are 3 professors of IIT who are behind the suicide of IIT student. It is being spread in social media that one of the Professors alleged Sudarshan Padmanabhan is a key functionary of Arappor Iyakkam. Also, a photo where in Sudarshan participated in a press conference at Arappor office is also being circulated. There is no truth in the allegation that Sudarshan is a functionary or office bearer of Arappor Iyakkam. Arappor Iyakkam works with Association for Democratic Reforms (ADR) on releasing assets and criminalities of all candidates that they had declared in their election affidavits during elections. Prof Sudarshan Padmanabhan participated in the press conference held at Arappor office as a representative of Association for Democratic Reforms (ADR). Also, he has attended few of our public events. Most of the press people are also aware of this. Therefore, there is no truth in what is being spread in the internet about Sudarshan being a office bearer or a functionary of Arappor.

At this Juncture, it is extremely crucial that the family of the girl who died gets justice. Chennai police should investigate the suicide in a fair and speedy manner and Justice must be served to the family without any delay.