PDS Ration Tenders Before & After Christy

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கு கொள்ளும் வகையில் விதிகளை மாற்றி அமைத்து டெண்டர் விட்டதில் இருந்து தான் இந்த ஊழல் துவங்கியது. இதற்காகவே ஹிமாச்சல பிரதேசத்தில் பணியில் இருந்த சுதா தேவி IAS தமிழகம் வர வைக்கப்படுகிறார்.

சந்தை விலையை விட அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து டெண்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் பில் போடும் வேலையை மட்டுமே கிறிஸ்டி நிறுவனங்கள் செய்கிறது. இது போல சுமார் 1500 கோடி கிறிஸ்டி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பல ஆதாரங்களுடன் இந்த ஊழல் பற்றிய புகார்களை அனுப்பியும் இதற்கு பதில் சொல்ல அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

ஏழைகளின் உணவில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை விரட்டி அடிக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று போராட வேண்டியது அவசியம். மார்ச் 15 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்.

இந்த போராட்டத்திற்கான திட்டமிடல் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். தொடர்புக்கு: 7200020099.

கொள்ளையனே_வெளியேறு #1500CrRationCorruption