PDS Scam Twitter Campaign to question Minister

Join us in the Twitter Campaign to question the minister, ruling party, opposition parties and media on this #1500CrPdsScam Let's make them talk about this. Video about the scam: https://youtu.be/Pfe5VrmWPQY

மளிகை கடைகளில் விற்கும் சர்க்கரை விலையை விட ரேஷன் கடைகளுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து சர்க்கரை வாங்குகிறார்கள். அதுவும் அனைத்தும் கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கப்படுகிறது. பருப்பு மற்றும் பாமாயில் வாங்குவதிலும் இதே ஊழல் தான்.

சுமார் 1500 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ள இந்த ஊழலை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் 10 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டது. CBIல் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளோம்.

ஆனால் தமிழகத்தில் இந்த ஊழல் குற்றச்சாட்டிற்கு மாநில அரசு எந்த பதிலும் இது வரை சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் யாரும் இந்த ஊழல் பற்றி மூச்சு விடவில்லை. எந்த தொலைக்காட்சியிலும் இந்த ஊழல் குறித்த விவாதங்கள் நடைபெறவில்லை.

நமது வரிப்பணம் 1500 கோடி பகிரங்கமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் கேள்விகளை கேட்க துவங்குவோம். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் எத்தனை நாட்களுக்கு இவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

நாளை ஒரு நாள் ஒவ்வொருவரும் 5 கேள்விகளை டிவிட்டரில் கேட்போம். ஒவ்வொரு கேள்வியிலும் #சர்க்கரை_விலை_என்ன என்ற hashtagயை இணைத்து அமைச்சர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மீடியா அனைவருக்கும் அனுப்புவோம். இந்த ஊழல் விவகாரத்தில் அரசியல் அழுத்தத்தை உருவாக்க நாளை 5 டிவீட் செய்யுங்கள்.