People are Arappors biggest supporters. Welcome to Potluck on Sunday Jan 5th at 6PM

அறப்போர் இயக்கம் ஒரு RSS இயக்கம் என்று ஒரு குரூப் சொல்லுது. அறப்போர் இயக்கம் திமுகவிடம் பணம் வாங்குவதாக ஒரு குரூப் சொல்லுது. அறப்போர் இயக்கம் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக ஒரு குரூப் சொல்லுது. காவல்துறை அறப்போர் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள். அமைச்சர் அறப்போர் மீது வழக்கு தொடுக்கிறார்.

இவை அனைத்தையும் மீறி மக்களாகிய நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவு தான் எங்களின் பெரிய பலம். இந்த புதிய ஆண்டு நமக்கு மேலும் சவாலாக இருக்க போகிறது. அரசாங்கத்தின் இத்தனை அடக்குமுறைகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களின் அவதூறுகள் என அனைத்தையும் தாண்டி தொடர்ந்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணித்து அதில் நடைபெறும் ஊழல்களை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டும் பணி மேலும் வலுவாக நடைபெறும்.

நாம் அனைவரும் இணைந்து இந்த புத்தாண்டை துவக்கும் விதமாக வருகின்ற ஞாயிறு மாலை 6 மணிக்கு நமது அலுவலகத்தில் #கூட்டாஞ்சோறு சந்திப்பு நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் இருவருக்கு உணவு கொண்டு வந்து அதை பகிர்ந்து சாப்பிட்டு பேச இருக்கிறோம்.

அறப்போர் இயக்கத்தின் இந்த வருட பணிகள் அதற்கு தேவைப்படும் உங்கள் உதவிகள் குறித்து பேச இருக்கிறோம். அறப்போர் இயக்கத்தின் பணிகளில் பங்கேற்க விரும்பும் அனைவரையும் இந்த சந்திப்பிற்கு அன்புடன் அழைக்கிறோம்.

Arappor #Potluck

Address: 140 A, Rukmani Lakshmipathi Salai, Near Egmore Govt Eye hospital.