முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் டெண்டர்களில் ஊழல் முறைகேடு முகாந்திரம் – ஆதாரம்

ரூ 1165 கோடி, 462 கி.மீ தஞ்சாவூர் சாலைகள் PBMC டெண்டரை Area Based Comprehensive Road Improvement, Strengthening and Maintenance(AB-CRISM) என்று பெயர் மட்டும் மாற்றி நெடுஞ்சாலை துறை அக்டோபர் மாதம் வெளியிட்டதை கடந்த பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டோம். ரூ 656 கோடி 208 கி. மீ சாலை AB-CRISM டெண்டராகவும் ரூ 494 கோடி , 254 Km சாலை AB-CRISM டெண்டராகவும் இரண்டாக பிரித்து போட்டுள்ளார்கள். இந்த டெண்டர்கள் யாருக்கு செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று அறப்போருக்கு கிடைத்த தகவல்களையும் டெண்டர் திறப்பதற்கு முன்பாகவே நெடுஞ்சாலை துறை செயலருக்கும் நிதித்துறை செயலருக்கும் அறப்போர் இயக்கம் அனுப்பியிருந்தது. நாங்கள் டெண்டர் திறப்பதற்கு முன்பாக நெடுஞ்சாலை துறை செயலருக்கு டெண்டர் செட்டிங் பற்றி குறிப்பிட்டு அனுப்பிய அதே நிறுவனங்கள் டெண்டர்களில் வெற்றிபெற்றுள்ளது. தெளிவாக இந்த டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது. ஊழல் முறைகேடு நிறைந்த இந்த டெண்டர்களை நெடுஞ்சாலை துறை செயலர் என்ன செய்ய போகிறார்? இது e-டெண்டர் என்றும் டெண்டர் திறக்கும் வரை யார் போட்டி போடுவார்கள் என்று யாருக்குமே தெரியாது என்றும் நேற்று சொன்ன முதலமைச்சர், நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் உள்ள நெடுஞ்சாலை துறையில் இந்த ஒரு நிறுவனம் தான் வெற்றி பெரும் என்று அறப்போர் இயக்கத்தால் மட்டும் டெண்டர் திறப்பதற்கு முன்பாகவே எப்படி துல்லியமாக சொல்ல இயல்கிறது என்பதை விளக்குவாரா??நெடுஞ்சாலை துறையில் டெண்டர் செட்டிங் நடக்காமல் இது சாத்தியமே இல்லை என்பதை ஒப்புக் கொள்வாரா?

1.png

ரூ 656 கோடி 208 கி. மீ சாலை AB-CRISM டெண்டர் 2020_HWAY_182929_1 முடிவடைந்து நவம்பர் 18, காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது (ஆதாரம் இணைப்பில்). அதே போல் ரூ 494 கோடி , 254 Km சாலை AB-CRISM டெண்டர் 2020_HWAY_182935_1 முடிவடைந்து நவம்பர் 19, காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது (ஆதாரம் இணைப்பில்). ஆனால் இந்த 2 டெண்டர்களும் திறப்பதற்கு முன்பாகவே, அதாவது நவம்பர் 18, காலை 9.42 மணிக்கு அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலை துறை செயலருக்கும் நிதித்துறை செயலருக்கும் புகார் அனுப்பியுள்ளது (ஆதாரம் இணைப்பில்). அந்த புகாரில் தெளிவாக ரூ 656 கோடி டெண்டர் RR Infra Construction நிறுவனம் சார்பிலும் ரூ 494 கோடி டெண்டர் JSV என்னும் நிறுவனம் சார்பிலும் செட்டிங் செய்யப்பட்டுள்ளதாக நமக்கு கிடைத்த தகவலை குறிப்பிட்டுள்ளோம். அதே போல் டெண்டர் திறந்த பிறகு நாம் சொன்ன அதே நிறுவனங்கள் தான் 2 டெண்டர்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன் ஆதாரத்தையும் இணைத்துள்ளோம்.

2.png

3.png

தெளிவாக ஊழல் முறைகேட்டிற்கான முகாந்திரத்தை இது காட்டுகிறது. நெடுஞ்சாலை துறை செயலர் கார்த்திக் IAS அவர்கள் தற்பொழுது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். இந்த டெண்டர்களை ரத்து செய்வாரா? இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? இதில் லஞ்சமாக பணம் கை மாறியதா என்பதை விசாரித்து நடவடிக்கை எடுப்பாரா?

ஏற்கனவே அறப்போர் இயக்கம் இந்த டெண்டரே எப்படி தேவை இல்லாத டெண்டர் என்பதை பல முறை சுட்டி காட்டி உள்ளது. மிக முக்கியமாக நம் மாநிலமே நிதி நிலையில் மோசமாக உள்ள சூழ்நிலையில் ஏன் மீண்டும் மீண்டும் நெடுஞ்சாலை துறை இப்படி தேவை இல்லாத டெண்டர்களை போட தீவிரமாக உள்ளது?? இந்த டெண்டரில் உள்ள மூன்று முக்கிய பிரச்சனைகளை ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளோம்

  1. இது வரை PBMC டெண்டர்களில் 1 கி. மீ க்கு ரூ 1 கோடி கொடுத்து வந்த நெடுஞ்சாலை துறை, ரூ 656 கோடி 208 கி. மீ சாலை AB-CRISM டெண்டரில் 1 கி.மீ க்கு ரூ 3.15 கோடி கொடுப்பதும் அதே போல் ரூ 494 கோடி , 254 Km சாலை AB-CRISM டெண்டரில் 1 கி.மீ க்கு ரூ 1.95 கோடி கொடுப்பதும் அபத்தம். இது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல். இதில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக PBMC என்னும் பெயரை மட்டும் AB-CRISM என்று மாற்றி உள்ளார்கள்.

  2. இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டுள்ள பல சாலைகள் மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள். எதற்காக அவற்றை பராமரிக்க 1 கி.மீ க்கு ரூ 3.15 கோடி ??

  3. அகலப்படுத்தும் பல சாலைகள் பெரிய அளவில் வாகன traffic ஏற்படாத சாலைகள் என்பதை அறிகிறோம். Traffic census வேண்டுமென்றே அதிகப்படுத்தி காடப்படுள்ளதாக அறப்போருக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அறப்போர் இயக்கம்

இந்த சாலைகள் அகலப்படுத்த வேண்டியவை தானா என்பதை அறிய தன்னிச்சையான குழு ஒன்று இந்த Traffic census சர்வே செய்ய வேண்டும் என்று நிதித்துறை செயலருக்கும் நெடுஞ்சாலை துறை செயலருக்கும் ஜூலை மாதம் புகார் அனுப்பியது. அதை செய்யாமலே மீண்டும் இப்படி டெண்டர் போடுவதன் அவசரம் என்ன?? மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதன் விவரங்களை கேட்டும் நெடுஞ்சாலை துறை அதை தர மறுக்கிறது.

மேலும் இதற்கு முன்பாக ஜூலை மாதம் முடிந்த ரூ 1150 கோடி தஞ்சாவூர் PBMC டெண்டரும் இதே போல் செட்டிங் செய்யப்பட்டதை டெண்டர் முடிவதற்கு முன்பாகவே அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலை துறை செயலருக்கு அனுப்பினோம். அதன் பிறகு அது ரத்து செய்யப்பட்டு தற்பொழுது இரண்டாக பிரித்து போட்டதிலும் செட்டிங் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை செயலர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தன் துறையில் இ – டெண்டர்களில் செட்டிங் செய்யப்படுவதை ஒப்புக் கொண்டு நேர்மையாக டெண்டர்கள் போட வழிவகை செய்வாரா ?

Prima facie Corruption evidences in Thanjavur AB-CRISM Tenders of Chief Minister’s Highways Department

Arappor Iyakkam had brought to notice in our previous press release that Highways Department floated the same Phase I Thanjavur PBMC tender in a different name called AB-CRISM (Area based comprehensive road improvements, strengthening and maintenance). The same PBMC phase

1 Thanjavur tender was split into 2 AB-CRISM tenders 2020_HWAY_182929_1 with tender value Rs 655,60,00,000 covering Thanjavur and Orathanadu subdivisions for 208.344 Kms of road work and 2020_HWAY_182935_1 with tender value Rs 493,70,00,000 covering Pattukottai and Peravurani subdivisions for 253.877 kms of road work. Arappor Iyakkam had sent a complaint to Highways Secretary and Finance Secretary before the opening of tenders on who will win these tenders. Arappor has now found that the exact same contractors whom Arappor named has won the tenders. Will the Highways Secretary take action on our complaint or award the tenders to these prefixed contractors?? While talking at the press conference yesterday, Chief Minister Mr. Edappadi Palanisamy said that no one knows who are participating in the tenders till the tender is opened. Can Chief Minister explain on how come Arappor Iyakkam is exactly able to name the company which will win the tender even before opening of the tender?? Will he accept that it is not possible without prefixing of tenders in favour of these companies ?

AB-CRISM tender 2020_HWAY_182929_1 with tender value Rs 655,60,00,000 covering Thanjavur and Orathanadu subdivisions for 208.344 Kms of road work was opened on 18/11/2020 at 11 Am and another 2020_HWAY_182935_1 with tender value Rs 493,70,00,000 covering Pattukottai and Peravurani subdivisions for 253.877 kms was opened on 19/11/2020 at 11 Am. However, at 9.42 Am on 18/11/2020, much before opening of the tender, Arappor Iyakkam had sent an email complaint to Highways Secretary and Finance Secretary mentioning how the Rs 656 Crore tender has been prefixed to RR Infra Construction and that Rs 494 Crore tender has been prefixed to a firm called JSV (Evidence attached). We have now found that the exact same companies have won the tender (Evidence Attached). This prima facie shows Corruption/ maladministration in the tenders. Will the Highways Secretary now act on this and cancel these tenders? Will he take action against the officials and firms involved in this ? Will he enquire if cash has exchanged hands in this deal ?

Arappor Iyakkam had earlier several times mentioned about the other issues in these tenders and how these tenders are colossal waste of public money. The key issues are recapitulated below

· In the Thanjavur phase 1 tender that has been split into 2 now in the name of AB-CRISM tenders, the per Km cost is at a whopping Rs 3.15 Crores per Km for 2020_HWAY_182935_1 covering Thanjavur and Orathanadu subdivisions and Rs 1.95 Crores/ Km for Pattukottai and Peravurani subdivisions. Both these are way higher than what Highways awarded for previous PBMC tenders which were only around Rs 1 Crore / Km. Clearly, the name alone is being changed to AB_CRISM to give a impression that it is a different scheme while the work, list of roads, total Kms are the same and seems to have been done to benefit select Contractors in a big way resulting in a huge loss to the exchequer.

· Many of the roads handed over under this AB-CRISM are roads that are in very good condition and hence does not require strengthening or relaying. This is a complete wastage of taxpayers money. The evidence of the roads in good condition were submitted along with our petition on 08/07/2020

· It has also been reliably learned that many roads selected for widening has been chosen on the basis of faking of increased traffic flows and that there is not enough traffic flows that mandates widening of these roads. Therefore, we had sought for an independent committee in our representation dated 08/07/2020 to look into whether the traffic flows recorded by the Engineers exist in real time or not and whether these projects are really productive or not. Why the Highways Secretary did not do it?

It must also be noted that the earlier Thanjavur phase I tender was also prefixed like this and on that occasion as well Arappor Iyakkam had sent a complaint to Highways Secretary on 18/07/2020 before the tender was opened. The same firm mentioned in that complaint won the financial bid in that tender as well. The tender was thereafter cancelled and retendered now as 2 tenders and the prefixing of tender in this is clearly proved as well. Therefore, will Chief Minister now accept that E- Tenders are indeed prefixed and take steps to float tenders honestly in Highways Department ?

We request the Chief Minister and Highways Secretary

  1. To cancel these AB-CRISM tenders immediately.

  2. Initiate Departmental as well as criminal action on officials and firms involved in prefixing of tenders

  3. Ensure a honest and transparent tender process.