Retired Army Officer declared foreigner sent to detention camp.

30 வருடங்களாக இந்திய ராணுவத்தில் வேலை செய்தவருக்கு இந்தியாவில் பிறந்த ஆதாரம் இல்லை என்று அசாம் அகதிகள் முகாமில் அடைத்து விட்டார்களாம். அடுத்து இந்தியர்கள் அனைவரையும் இந்தியாவில் பிறந்தீர்களா என்று ஆதாரம் கேட்பார்கள். பிரதமருக்கே டிகிரி சர்ட்டிபிகேட் இல்லாத இந்த நாட்டில் பாமர மக்கள் இவர்கள் கேட்கும் ஆவணங்களுக்கு எங்கே போவார்கள்? ஆவணங்கள் இல்லை என்று சொல்பவர்களில் முஸ்லிம்களை மட்டும் அகதிகள் முகாமுக்கு சட்டப்படி அனுப்புவார்கள். அதற்கு நான் இந்த CAA NRC NPR என்று பல வகையில் கொண்டு வரப்படும் சட்டங்களும் திட்டங்களும்.

சிறுபான்மை சமுதாய மக்களின் பயம் இது தான். இந்த பயத்தை போக்க எந்த முயற்சியும் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக இந்த சட்டத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பயங்கரவாத கருத்துக்களை தங்கள் கட்சி தொண்டர்கள் மூலம் பதிந்து வருகிறார்கள்.

மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் சட்டங்களும் திட்டங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு செய்யப்படும் துரோகம். இது போன்ற தேச விரோத முயற்சிகளை அறப்போர் இயக்கம் மக்களின் துணையுடன் தொடர்ந்து எதிர்க்கும்.

**https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/retired-army-officer-from-assam-declared-foreigner-sent-to-detention-camp/articleshow/69572950.cms**

NoToCAA #NoToNRC #KolamAgainstCAA