அறப்போர் மீது தொடரும் வழக்குகள்

criminal defamation.jpeg

சென்னை மாநகராட்சியில் டெண்டர் செட்டிங் செய்து நடக்கும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் பல ஆதாரங்களை வெளியிடுகிறது. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் கோபம் கொண்ட ஒப்பந்ததாரர்கள் அறப்போர் மீது சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார்கள். அமைச்சர் வேலுமணி அவர்களும் சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார். வழக்கு விசாரணை முடியும் வரை அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சி செட்டிங் டெண்டர் ஊழலை குறித்து பேச கூடாது என்று அமைச்சர் வேலுமணி தடை கேட்கிறார். தடை கொடுக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதம் செய்யப்பட்டது. ஆதாரங்களை பார்த்த நீதிபதி இந்த வழக்கில் ஆதாரங்கள் விசாரணைக்கு ஏற்க கூடியதாக இருப்பதால் இந்த செட்டிங் டெண்டர் ஊழல் குறித்து பேச எந்த தடையும் விதிக்க முடியாது என்று தள்ளுபடி செய்கிறார்.

அடுத்தகட்டமாக சென்னை காவல்துறை ஆணையர் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மீது சத்தியம் டிவி விவாதத்தில் அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் பற்றி பேசி அவருக்கு மானநஷ்டம் ஏற்படுத்திவிட்டார் என்று புகார் அளிக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு அறப்போர் ஜெயராம் மீது கிரிமினல் மானநஷ்ட வழக்கு பதிவு செய்கிறது.

அனைத்து அதிகாரங்களும் கொண்ட தமிழக அமைச்சர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் இருவரும் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள். அறப்போர் இயக்கத்திடம் உண்மை இருக்கிறது. இந்த வழக்கையும் சட்டரீதியாக சந்திப்போம். உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.

அறப்போர் தொடரும்...

To read in English https://www.thehindu.com/…/state-files-…/article28777194.ece