Update on the Ramapuram Fake Case filed on Arappor

சென்னை ராமாவரம் பகுதியில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக அங்குள்ள குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொது மக்களை திரட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ராமாவரம் பகுதியில் காவல்துறை அனுமதியுடன் அறப்போர் இயக்கம் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கோபம் அடைந்த அரசியல்வாதிகள் அங்குள்ள காவல்துறை உதவியுடன் இயக்க உறுப்பினர்கள் மீது பொய்யான புகார்கள் கொடுத்து வழக்கு தொடர்ந்தனர். இந்த பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இயக்கம் மீது தொடரப்பட்ட வழக்கில் இனி நேரில் விசாரணைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பொய் வழக்குகள் போட்டு இயக்க உறுப்பினர்களை அலைக்கழிப்பதன் மூலம் இயக்கத்தின் செயல்பாட்டை முடக்கலாம் என்று நினைக்கும் உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறாது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவை அனைத்தையும் சட்டப்பூர்வமாக உடைத்து மேலும் மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.