திடக் கழிவு மேலாண்மை டெண்டர் விதிமீறல்கள் – பத்திரிக்கை வெளியீடு

67877060_1459102574228770_7555897000462385152_n.jpg

திடக்கழிவு மேலாண்மை தொடர்பான சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களுக்கான ரூ 4000 கோடி ஒப்பந்தங்கள் நாளை முடிவடைய உள்ளன. ஆனால் இந்த டெண்டர்கள் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் மாநகராட்சி விதிகளில் பல மீறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்பிற்குறிய ஒப்பந்தங்கள் இவ்வளவு விதிமீறல்களுடன் 8 வருடத்திற்கு ஒப்பந்தம் ஆக உள்ளது. இது சென்னையின் ‘ZERO WASTE’ கனவை குழி தோண்டி புதைத்துவிடும். எனவே இந்த டெண்டர்களை உடனே ரத்து செய்யவும், தவறுகளை நிவர்த்தி செய்ய வேண்டியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளோம். இங்கு உதாரணத்திற்கு மண்டலங்கள் 1,2,3 மற்றும் 7 டெண்டர்களின் விதிமீறல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்கலான 9,10,13 டெண்டர்களிலும் மண்டலம் 11,12,14,15 டெண்டர்களிலும் இதே விதிமீறல்களால் தன உள்ளது.

1) சுமார் 95% குப்பைகள் குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்பப்படும் என்பது 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு எதிரானது. விதிகளின்படி குறைந்த பட்ச குப்பைகளை மட்டுமே குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும். கீழ்க்கண்ட அட்டவணையில் இந்த குறைந்த பட்ச உத்தரவாதமானது எவ்வாறு 8 வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

1.jpeg

2) மொத்தமாக அள்ளப்படும் குப்பையில், 89.6% அளவு மக்கும் குப்பை கொடுங்கையூருக்கு கொண்டு செல்லப்படும் என்பது மிகப்பெரிய விதிமீறல்களுள் ஒன்று. திடக்கழிவு மேலாண்மை விதிகளில் கூறப்பட்டுள்ளதென்னவென்றால், மக்கும் குப்பையானது ஒன்று உரமாக்கப்பட வேண்டும் அல்லது அருகாமையிலேயே பயோகேசாக மாற்றப்பட வேண்டும். ஆனால் டென்டரில் மதிப்பிடப்பட்டுள்ள 396.15 டன் மக்கும் குப்பையில், வெறும 38.2 டன் குப்பை மட்டுமே உரமாக்க/எருவாக்கப்பட அருகாமை இடங்களுக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டிருக்கிறது.. இது திடக்கழிவு மேலாண்மையின் நோக்கத்தையே தோற்கடிப்பதாகும்.

3) டென்டரில் கூறப்பட்டிருப்பது என்னவெனில், மக்காத குப்பையில் 0.4% மட்டுமே ஆங்காங்கே அருகாமையில் மறுசுழற்சிக்கான மையங்களில் பிரிக்கப்படும் மீதி 99.6% கொடுங்கையூருக்கு நேராக அனுப்பப்படும். அதாவது ஒரு பகுதிக்கு சுமார், 1 டன் மட்டுமே அருகாமை குப்பை பிரிப்பு மையங்களில் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதமுள்ள 226.33 டன் குப்பை கொடுங்கையூருக்குக் கொண்டு செல்லப்படும் எனில் இது திடக்கழிவு மேலாண்மை விதிக்கு முற்றிலும் எதிரானது.

4) ஆரம்ப வருடாந்தர விலைப்பட்டியல்/ விலைகூறல் (IAQ) எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு பிரித்தல், உரமாக்கல் மற்றும் மறுசுழற்சிக்கே செல்ல வேண்டிய நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு குப்பைகளைப் பிரித்து திரட்டுதலைத் தாண்டி எந்த ஒரு பொறுப்பும் தரப்படவில்லை. 744 கோடி ரூபாய் ஒப்பந்தமானது 1,2,3 மற்றும் 7 மண்டலங்களில் நாளொன்றிற்கு ஒரு டன் குப்பைக்கு ரூ.2,960 வீதம் 8 வருடத்திற்கு மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது அனைத்து குப்பையையும் கொடுங்கையூருக்குக் கொண்டு செல்லப்பட்டால் உண்டாகும் செலவாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அருகாமையிலேயே குப்பை பிரித்து மக்கவைத்தோ மறு சுழற்சியோ செய்யப்பட்டால் இவ்வளவு செலவு ஏற்படாது.

5) அரசின் ஒப்பந்ததாரர், மக்களிடமிருந்து பிரிக்கப்படாத குப்பையை 12 மாத காலம் வரை திரட்டலாம் என டென்டர் கூறுகிறது. 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அந்நாளிலிருந்து 24 மாத காலத்திற்குள் குப்பைகளை பிரித்தே மக்களிடமிருந்து பெற வேண்டுமே தவிர ஒப்பந்த காலத்திலிருந்து அல்ல. எனில் அக்காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது. தற்போது குப்பைகளை மக்களிடமிருந்து பிரித்து மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5.jpeg

6) 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்களிடமிருந்து குப்பைகளை பிரித்து மட்டுமே திரட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விதியின் 15வது புள்ளியில் எந்தெந்த குப்பை எந்தெந்த வகையில் பிரிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையருக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு வரையருக்கப்பட்டுள்ள முக்கிய செயல்திறன் காட்டிகளில், குப்பைகளை பிரித்து எடுப்பது சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குப்பை வண்டிகளில் உலர்ந்த மற்றும் ஈரமான குப்பைகளுக்கான பிரிவுகள் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்லாத செயல்திறன் காட்டியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முக்கிய செயல்திறன் காட்டியாக ஆக்கவில்லையென்றால், குப்பைகளை பிரித்து வாங்குவது தோல்வியிலேயே முடியும்..

7) இந்த ஒப்பந்தங்களின்படி, இரண்டாம் நிலை சேமிப்பு இடங்களாக, RC(Refuse Compactor) குப்பை தொட்டிகளே இருக்கும் என்று தெரிகிறது. இரண்டாம் நிலை பிரித்தல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் ரோட்டில் வைக்கப்படும் RC குப்பை தொட்டிகளை அகற்ற எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் இணையாமல் பொதுமக்கள் பலர் எப்போதும் போல பிரிக்கப்படாத குப்பையை குப்பை தொட்டியில் போடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மேலும் ரோட்டோரம் இருக்கும் RC குப்பை தொட்டியில் மக்காத குப்பையில் இருந்து மறுசுழற்சிப் பொருள்களை மீட்க முடியாது. குப்பை பொறுக்குபவர்கள் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள் பணியாற்றும் அளவுக்கு போதுமான இட வசதியுடன் கூடிய பொருள் மீட்பு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று திடக் கழிவு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இல் கூறப்பட்டுள்ளதற்கு புறம்பாக உள்ளது.

8) ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன்-படி முக்கிய செயல்திறன் காட்டிகளில், அடிப்படையானவற்றில் (Core Key Performance Indicators [KPI]) தொடர்ந்து 90 நாட்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் மட்டுமே ஒப்பந்ததாரருக்கு விடப்பட்ட பகுதியை மாநகராட்சி மீட்க முடியும். இதன்படி ஒப்பந்ததாரர் 89 நாட்கள் சரியாகச் செயல்படாமல் இருந்துவிட்டு ஒரு நாள் சரியாகச் செயல்பட்டால் கூட ஒப்பந்தம் தொடரும். இவ்வகையில் சரியாக செயல்படாமலேயே 8 வருட காலம் ஒரு ஒப்பந்ததாரர் தொடர்ந்து கொண்டு, மக்களை பெரும் இன்னலில் தள்ள முடியும்.

9) ஒப்பந்தத்தில் புகார்கள் நிவர்த்தி செய்யும் நடைமுறைகளை ஒப்பந்ததாரரே ஏற்று செயல்படுத்துவார் என்று உள்ளது. தற்போது இது மாநகராட்சி-வசம் உள்ள போதே புகார்களை நிவர்த்தி செய்து கொள்வதில் பல சவால்கள் உள்ளன. புகார் தெரிவிக்கும் மக்களை ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசர்கள் மிரட்டுதல், புகார் செய்பவர் போன் எண்களை பாதுகாத்துக் கொள்ளும் வசதி இல்லாதது, நிவர்த்தி செய்யப்படாத ஓரு புகாரை இரண்டாம் முறை திறக்க வசதி இல்லாதது, வேறு பகுதிகளில் எடுத்த புகைப்படங்களைப் அதிகாரிகள் பதிவிட்டு புகார் நிவர்த்தி செய்யப்பட்டதாகக் காண்பித்தல் ஆகிய முறைகேடுகள் நடக்கின்றன. ஆக ஒப்பந்த்தாரரிடமே புகார் தெரிவிக்கும் நடைமுறை கொடுக்கப்பட்டால் நிலமை இன்னும் மோசமாகும்.

10) ஒப்பந்தத்தின்படி இரண்டாம் நிலை குப்பை சேகரிக்கும் வாகனங்களிலும், இயந்திர துப்புரவு வாகனங்களில் மட்டுமே GPS வசதி பொருத்தப்பட்டிருக்கும். வீடு வீடாக குப்பை சேகரிக்கும் இ-ரிக்‌ஷா வாகனங்களில் GPS வசதி சந்தேகத்திற்கு இடமான வகையில் குறிப்பிடப்பாடாமல் உள்ளது. குப்பை பிரித்தலுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவதற்கும், பிரிக்கப்படாத குப்பையை தெரு முனைகள், ஆறு, கால்வாய்களில் கொட்டாமல் இருப்பதற்கும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி தவறாமல், குறித்த நேரத்தில் நடப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு முக்கியமான பணி சிறப்பாக நடப்பதை உறுதி செய்ய GPS வசதி மிகவும் அவசியமாகிறது. வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி மற்றும் திடக் கழிவை பிரித்துக் கையாள்வதை திறம்பட நிர்வகிப்பதில் மாநகராட்சிக்கு அர்பணிப்பு இல்லையோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. தற்போது செல்போன் GPS தொழில்நுட்பம் நம்பகமானதாகவும் விலை குறைவாகவும் இருக்கிறது. கால் டாக்சி நிறுவனங்கள் கூட இதையே பயன்படுத்துகின்றன.

11) மேலும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ல் கூறப்பட்டுள்ளது போல பேக்கிங் பொருட்களை உற்பத்தியாளர்கள் செலவிலேயே தனித்தனியாக பிரித்து அவர்களிடமே கொடுக்கும் விதமான எந்த திட்டமும் இந்த ஒப்பந்த்ததில் இல்லை. Extended producer responsibility(EPR) எனப்படும் நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்புடைமையை உறுதி செய்யும் விதிகளில் உள்ள முக்கிய பிரிவு, பொருள் மீட்பு மையங்களில் நடைபெறும் இரண்டாம் நிலை பிரித்தல் பணியில் செயல்படுத்தப்படவில்லை.

சுமார் 4000 கோடி மதிப்புள்ள இந்த மூன்று ஒப்பந்தங்களே சென்னையின் திடக் கழிவு எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. ஆனால் மேலே குறிப்பிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இது செயல்படுத்தப்பட்டால், சென்னையில் திடக் கழிவு பிரித்தலின் அளவிலோ, பெருங்குடி கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லபப்படும் திடக் கழிவின் அளவிலோ பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த ஒப்பந்தங்கள் இதுவரை இருந்து வந்துள்ளது போன்ற சென்னை மாநகராட்சியின் திடக்கழிவை இடம் பெயர்க்கும் திட்டம் தானே தவிர, திடக் கழிவை மேலாண்மை செய்யும் திட்டம் இல்லை. அது மட்டுமல்ல, இந்த டென்டர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்திற்கும் புறம்பாக உள்ளது. எனவே இந்த டெண்டெர்களை திரும்பப்பெற்று மேற்கண்ட பிரச்சனைகளைக் களைய வேண்டும். முதலில் பரவலாக்கப்பட்ட (வார்டு/பகுதி வாரியான) மக்கும் குப்பைக்கான உரக் கிடங்குகள், பயோ மீதேனேஷன் அமைப்புக்கள் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் மையங்கள் என மொத்த திடக் கழிவையும் கையாளும் கொள்ளளவில் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான டெண்டர்கள் முதலில் விடப்பட வேண்டும். மிகக் குறைந்த சதவீத எஞ்சிய கழிவுகள் மட்டுமே நிலப்பரப்புகளில் கொட்டுவதற்காக கொண்டு செல்லப்பட வேண்டும். ஒவ்வொரு வகை குப்பைகளையும் கையாளுவதற்கு போதுமான மொத்த கொள்ளளவையும் எட்டுவதே அரசின் உடனடி நோக்கமாகவும் பணியாகவும் இருக்கவேண்டும். அதற்கான வேலைகள் செய்த பிறகே அந்தந்த குப்பை கையாளும் மையங்களுக்கு குப்பைகளை எடுத்து செல்லும் நீண்ட காலம் டென்டர்கள் விடப்பட வேண்டும்.

மேலும் இத்தகைய டெண்டர்கள் மாநகராட்சி மண்டல வாரியாக விடும் போது செயல்திறனை உறுதி செய்தல் மற்றும் சரியாக செயல்படாத ஒப்பந்த்தாரரை மக்களுக்கு பெரிய பாதிப்பின்றி மாற்றுதல் போன்றவை எளிமையாகும். மண்டல வாரியான ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு பணி தரமாக நடைபெறும். தற்போது உள்ளது போன்ற ஆயிரக்கணக்கான கோடிக்கான பெரிய டெண்டர்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவற்றை அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.

To The Commissioner Greater Chennai Corporation Rippon Building Park Town Chennai 03

Sub: Violations of SWM Rules and Bye laws in Tenders floated for SWM 1. SWMCNo.A7/3025/2017-Package-I , SWMCNo.A7/2860/2018-Package-V and SWMCNoA7/3025/2017(Package-II)

Dear Sir, We read through the various Solid waste management related tenders of the Chennai corporation and noticed several serious violations of the Solid waste management rules and by laws of 2016. Inorder to explain the violations, I am hereby detailing it for one tender floated for zones 1, 2, 3 and 7 (SWMCNo.A7/3025/2017-Package-I ). The same violations are also there in the above mentioned 2 other tenders floated for zones 9,10,13 and 11,12,14,15. We understand that the 3 tenders are worth close to Rs 4000 Crores and we are shocked that Chennai Corporation is handing over such huge tenders without adhering to the solid waste management rules and by laws. We request you to immediately cancel these tenders, redraft adhering to the rules and then float it. We wish to bring them to your notice for your immediate action.

  • While the SWM rules 2016 and the SWM By Law 2016 clearly specifies that only a minimal residue should be taken to landfill, the tender floated guarantees 95% of the total waste collected to be taken to landfill. This is completely in contravention to the rules, by laws and to the commitment of the Chennai Corporation to segregate waste and send minimal residual waste to the landfill. Section 15(zi) of the SWM rules 2016 and section 5.0(y) in Page 11 of SWM by law 2016 prohibit dumping of waste and only sanitary landfill of residual waste is allowed. Therefore, the tender floated legally violates the rules and by laws and shall be deemed to be illegal. The below table taken from the tender shows how this minimum guarantee has been extended for a period of 8 years with increase in the amount of waste to the landfill every year.

1.jpeg

  • One of the major violations in the tender, as we could understand is, allowing 89.6% of the total biodegradable waste collected, to be taken to Kodungaiyur. The points 15(q), 15(r), 15(zi) of the SWM rules 2016 and the points 5.0(k), 5.0(l), 5.0(y) in page 9 and 11 of the SWM By Law 2016 mention that the biodegradable waste is to be either composted or used for bio-methanation or similar methods at the closest decentralized units. But in Schedule 6 in Page 36 in the tender document VOLIIBPackage1, out of the 396.15 tons of estimated biodegradable waste, only 38.2 tons of biodegradable waste is composted/ sent to decentralized units. This means that 358 tons which is over 90% of the total biodegradable waste collected is not composted or treated at the decentralized units as said in the law but transported to Kodungaiyur. This defeats the spirit and purpose of Solid Waste rules.

  • Also, 99.9% of the recyclable waste is not sorted and recycled at the decentralized material recovery facilities or secondary storage facilities units but transported to Kodungaiyur directly, as per the Schedule 6 in Page 36 of VOLIIBPackage1 in the tender. Only 1 ton per day of recyclable waste is recycled at the decentralized unit and the rest 226.33 tons (227.33 tons – 1 ton) is transported to Kodungaiyur every day. This again grossly violates the solid waste rules and by law. Point 15 (h) of the Solid waste rule 2016 states that

setup material recovery facilities or secondary storage facilities with sufficient space for sorting of recyclable materials to enable informal or authorised waste pickers and waste collectors to separate recyclables from the waste and provide easy access to waste pickers and recyclers for collection of segregated recyclable waste such as paper, plastic,metal, glass, textile from the source of generation or from material recovery facilities

The tender does not have any provision to make the above mandatory for the entire bulk of recyclable waste.

  • There is no basis on which the Initial Annual Quote has been decided. Most of the money needs to go into segregation, composting and recycling. However excep t for collecting in a segregated manner, the contractors are not made responsible for secondary segregation or recycling at the material recovery centres or at secondary collection centres as per tender. There seems to be lack of any basis to decide the estimated Initial annual quote. For the Rs 744 crore tender which is for zone 1, 2, 3 and 7, the per ton rate per day works out to be Rs 2,960 taking into account the total estimated tons for the 8 years. This is the case when you consider that all the waste is transported to the Kodungaiyur dumpyard. Even this per tonnage rate for transportation is on the higher side than what is being given currently. Now that the Corporation must follow the SWM rules, the tonnage over time that is transported to the landfill needs to be reduced considerably over the 8 years. Therefore, the initial annual quote should be decided on the estimated tons that will be transported to the landfill which should only be less than 10% of the assumed tonnage. However the initial annual quote seems to have been decided with increased tonnage year on year going against the solid waste management rules. Even if you take into account the cost allocated toward segregated collection, the initial annual quote seems very high and irrational. Given that the contractor is not made responsible for composting and recycling of waste, this budget for just collection and transportation is highly irrational. Focus needs to be on composting and recycling and therefore maximum budgets needs to be allocated for these purposes so that we achieve the goal of sending minimum waste to landfill and recycling most of the waste at decentralized centres.

  • The Assigned target in point 5.3 of table 3 (Key Performance Indicators) in Schedule 17 in page 104 of VOLIIBPackage1 in the tender states that the concessionaire shall also collect un-segregated waste from household for a period of 12 months. A transition period of 24 months is allowed from when the Solid Waste Management rules of 2016 was implemented per point 21(5) of SWM rules 2016 and not when the tender is coming to effect. By now, the only waste that should be collected from households is the segregated waste. The time period mentioned has already lapsed.

5.jpeg

  • Segregated Collection is the fundamental duty of the corporation as mentioned in SWM rules 2016. The rules under point 15 lists out how different wastes needs to be collected in a segregated way. The tenders have key performance indicators based on which payment is to be made. There are different parts of the process that are classified as Key performance indicators and non-key performance indicators. Segregated household collection through different bins is the first step and is extremely key to the segregation of waste. However, while segregated collection is mentioned as core KPI, the provisioning and maintenance of separate compartments in tricycles and e-rickshaw for dry and wet waste separately has been defined as a non core KPI which means this will not affect their payment. However maintenance of this collection vehicle with separate compartments is key to segregated collection and therefore it must be defined as core KPI. Failure of this will result in failure of segregated collection.

  • It is stated in point 1.7 (b) in page 8 of VOLIIBPackage1 and under point 4.3.1 in page 21 in VOLIIIPIM of the tender that the secondary collection points are RC bins placed at various locations along the road. There is no mention of secondary segregation. This also implies that the bins are to stay and there are no plans of going bin free. If bins in the roads are not removed there is every possibility that residents would deposit unsegregated waste in the RC bins. Also, the material recovery from the recyclable waste cannot happen on the road within the RC bins. This is violating point 15(h) of SWM rules 2016 and point 5(e) in Page 9 of the SWM by law 2016 which states that the material recovery facilities are to be set up to with sufficient space to enable recovery by waste pickers and collection by recyclers. As per the point 7.1 under Article 7 in page 64 of VOLIIADCAPKGIFourthCallFinal in the tender, change of scope is possible only if the performance drops for more than 90 consecutive days. This means that the concessionaire could be under-performing for 89 days in any core KPI and still get away by performing up to the mark for just one day. In this manner the concessionaire could underperform for 8 long years of the tender period and still continue, leaving the Chennai corporation and people of the city in the lurch.

  • As per the point 21.14 of Schedule 21 in page 130 in VOLIIBPackage1 of the tender, the Complaint Redressal mechanism for solid waste would be setup by the concessionaire himself. Citizens already face various challenges in getting their complaints redressed when it is with the corporation. Threatening calls to complainants from supervisors working for contractors, lack of privacy of phone numbers, lack of an option to reopen an unresolved complaint for the 2nd time, officials closing off complaints with old or random pictures are all not uncommon occurrences even today. If the concessionaire himself handles complaints against his work, handle the call centre etc, it could make it extremely difficult for the citizens to address grievances.

  • The point 10.1(c) of schedule 10 in page 66 in VOLIIBPackage1 of the tender states that the concessionaire shall install GPS in all secondary collection vehicles and Mechanical sweepers. But GPS tracking for primary collection seems to be conspicuously missing in the tender. It’s common knowledge that regular and punctual door to door collection of waste is a very crucial element of solid waste management to ensure public cooperation for segregation and ending dumping of unsegregated waste in street corners, canals, rivers, vacant lands etc. And without effective segregated door to door collection, satisfying the provisions of the SWM by law is almost impossible. Tracking of the primary collection vehicle being so fundamental to effective segregated collection, not having GPS in primary collection vehicle could very well imply, allowing violation of the rules. Cell phone based GPS technology is so cheap and effective and wouldn't even add much cost to the operations.

  • The tender does not make any provision to enable segregation and transfer of packaging materials back to producers at their cost as per the points 17(1) and 17(2) of the SWM rules 2016. This important part of the rules that will help in enforcing the extended producer responsibility (EPR) is not covered as part of the secondary segregation of non-biodegradable waste at the Material recovery facilities. With such a tender in effect it could become impractical to implement these rules and the burden of handling the non-biodegradable packaging materials which is a big component of the total waste would instead fall on the corporation and thus the tax payers. There has also been no effort made to estimate the amount of such waste in the estimation of quantity of different waste categories in the tender document. Estimating and excluding this waste from secondary collection and transportation is vital for passing the large costs back to the producer.

We would like to state that the 3 tenders in total is estimated around Rs 4000 crores and is going to decide the garbage future of Chennai. With such major loopholes, Chennai will neither see a drastic increase in segregation nor a drastic decrease in waste being transported to landfills. The above tenders again seem to be a continuation of the earlier policy of solid waste displacement by Chennai Corporation rather than Solid waste management. We seriously appeal to the Chennai Corporation to withdraw these Tenders and redraft taking into account the above concerns and help in making Chennai a zero waste city. Also, such tenders can be floated zone wise or for smaller area rather than such huge tenders. Monitoring and ensuring quality will be easier for smaller units. Most importantly, penalizing/ cancelling tenders for non-performance of one will not have a huge impact on the garbage collection of the whole city in such smaller tenders. This can also ensure healthy competition and quality in the long run.