ArapporWaterbodiesWatchTeam சென்னையில் உள்ள நீர்நிலைகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் சிதைந்து போய் இருக்கும் நிலையில் 47 நீர்நிலைகளை 106 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கொடுத்துள்ளது. பெரும்பாலும் இது போல் நீர்நிலைகள் சீரமைப்பு டெண்டர் கொடுக்கப்பட்டு அதற்கான வேலை நடப்பது மிகவும் அரிது. வேலை நடந்ததாக சொல்லி நாடகம் நடத்தி பணத்தை ஏப்பம் விடும் அவலம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் இனி அப்படி வேலை செய்யாமல் பணத்தை திருட அறப்போர் இயக்கம் அனுமதிக்காது. இந்த 47 நீர்நிலைகளின் தற்போதைய நிலையை அறப்போர் தன்னார்வலர்கள் படங்கள் எடுத்து ஆவணப்படுத்தி வருகிறார்கள். கொடுக்கப்பட்டுள்ள டெண்டரில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்களா என்று கண்காணிக்க அறப்போர் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில் நீங்களும் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க 7200020099 அழையுங்கள். WhatsApp message அனுப்புங்கள்.

10 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ள ஆலப்பாக்கம் ஏரியின் இன்றைய நிலை மற்றும் அதில் செய்யப்பட வேண்டிய பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து முடித்து விட்டோம். அடுத்து சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பணியை எப்பொழுது துவக்குவார்கள் என்று காத்திருக்கிறோம்.

We are watching...!