When will CBI take action against complaint on Arappors Complain in PDS Scam

கிறிஸ்டி நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட வரி ஏய்ப்பு புகார்கள். பல்வேறு சோதனைகள் மூலம் அவர்கள் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போது சசிகலா தன்னுடைய கருப்பு பணத்தை புதிய நோட்டுகளாக மாற்ற கிறிஸ்டி நிறுவன முதலாளியிடம் 230 கோடி கொடுத்ததாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. அதே கிறிஸ்டி நிறுவனம் தற்பொழுது தமிழக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதில் 1500 கோடி ஊழல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொள்ளையில் பொதுத்துறை நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு உதவியாக இருந்ததும் ஆதாரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆகவே அறப்போர் இயக்கம் இந்த கொள்ளையை CBI விசாரணை செய்ய வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே புகார் அளித்துள்ளது. ஆனால் இது வரை CBI எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் முதல்வர் சொல்லுக்கு காத்திருக்கும் DVAC போல மத்தியில் பிரதமர் சொல்லுக்காக CBI காத்துக் கொண்டு இருக்கிறதா? அப்பட்டமாக இத்தனை ஊழல் நடந்த பிறகும் கிறிஸ்டி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஏன் தயக்கம் காட்டுகிறார்? விடை கிடைக்குமா? விசாரணை நடக்குமா?

மார்ச் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூடி நமது கேள்விகளை உரக்க கேட்போம் வாருங்கள்.

March 15 | Sunday | 9.30 am | Valluvar Kottam | Ph:7200020099
#கொள்ளையனே_வெளியேறு
#1500CrRationCorruption