When will Opposition DMK against the 1500 Crore PDS Ration Scam?

தமிழக ரேஷன் கடைகளில் நடைபெற்ற 1500 கோடி ஊழல் பற்றிய விவரங்கள் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு 3 வாரங்கள் கடந்து விட்டது. ரேஷன் துறை அமைச்சர் இதெல்லாம் அபத்தமான குற்றச்சாட்டு என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட்டார். முதல்வர் பழனிச்சாமி ஊழலை பாதுகாக்க வழக்கம் போல அமைதி காக்கிறார். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளும் நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த ஊழல் பற்றி பேசாமல் அமைதி காப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் இந்த ஊழல் பற்றி பேசாமல் இருப்பது ஏன்?

இது வரை பேசவில்லை. இனியாவது பேசுவார்களா? ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்டு, தடுத்து நிறுத்தி உண்மையான எதிர்க்கட்சியாக தங்கள் கடமையை செய்வார்களா?

ஊழல் விளக்க வீடியோ; https://youtu.be/Pfe5VrmWPQY

1500CrPdsScam

Admk #Dmk