WHISTLEBLOWER THREATNED!

Video Link: https://www.youtube.com/watch?v=taVZfLNFr0Q

சென்னை மாநகராட்சி ஊழல்களை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த பிறகு, நாம் கூறியதில் உண்மைத்தன்மை உள்ளது என்றும் நேர்மையான டெண்டர் முறை தேவை என்றும் தொடர்ந்து சில ஒப்பந்ததாரர்கள் போராடி வருங்கின்றனர். அதில் #சந்திரபோஸ் என்னும் ஒப்பந்ததாரர், அதிகாரிகள் டெண்டர் செட்டிங் செய்வதையும், டெண்டர்களின் DD யான வைப்புதொகையை டெண்டர் செட்டிங் செய்த நபர்களை தவிர மற்றவர்களிடம் வாங்க மாநகராட்சி பொறியாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் தொடர்ந்து ஆதாரங்களை வெளிக்கொண்டும் வந்துள்ளார். நாம் கொடுத்த ஊழல் புகார்களிலும் ஒரு சாட்சியாக உள்ளார். அவருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. திடீரென்று அவர் வீட்டிற்கு 06/02/2020 அன்றும் அவரது மற்றொரு இடத்திற்கும் 05/02/2020 அன்றும் மாநகராட்சியிடமிருந்து பதிவு தபாலில் கடிதம் வருகிறது. அதில் 3 நோட்டீஸ் உள்ளது. 04/02/2020 தேதியிட்ட வீட்டை 15 நாட்களுக்குள் காலி செய்யும் நோட்டிஸ், 29/01/2019 தேதியிட்ட லாக் அண்ட் சீல் டிமாலிஷன் நோட்டிஸ் மற்றும் 08/01/2019 தேதியிட்ட பிளான் காபி கேட்கும் நோட்டிஸ். பொதுவாக முதலில் பிளான் காபி கேட்க வேண்டும். அது இல்லை என்றால் அடுத்தது லாக் அண்ட் சீல் மற்றும் டிமாலிஷன் நோட்டிஸ் வழங்க வேண்டும். அதன் பிறகு வீட்டை காலி செய்யும் நோட்டிஸ் வழங்க வேண்டும். ஆனால் அவரிடம் மாநகாராட்சி பிளான் இருக்கும் பொழுதும் இந்த மூன்று நோட்டிசும் ஒரே நாளில் வழங்கப்படுகிறது. அந்த முன் தேதியிட்ட நோட்டிசுகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை பொய்யாக உருவாக்க மாநகராட்சி அதிகாரிகள் அவர் வீட்டிற்கு 04/02/2020 அன்று காலை வந்து நோட்டிஸ் ஒட்டுவது போல் புகைப்படம் எடுத்து பின்பு அதை பிய்த்து எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். பாவம் நம் காவல் துறை ஆணையரின் மூன்றாம் கண் திட்டமான ஊக்குவிப்பில் போடப்பட்ட CCTV அதை படம் பிடிக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இதோ அந்த வீடியோ. இந்த நோட்டிஸ் கொடுத்து அறப்போர் புகார்களில் சாட்சியாக இருக்கக்கூடாது என்றும் இல்லை என்றால் மாநகராட்சி பிளானுடன் 17 வருடங்கள் முன்பு கட்டப்பட்ட வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டப்பட்டு வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதே அதிகாரிகள் உயர் பதவியில் இருந்து இந்த மிரட்டல்களை செய்கின்றனர். சென்னை உயர்நீதி மன்றம் இதற்கு இடைக்கால தடை கொடுத்துள்ளது. மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டியும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டியும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுப்பார்களா அல்லது ஊழல்வாதிகள் அழுத்தத்தில் மௌனம் காப்பார்களா ?

After Arappor Iyakkam brought out the corruption in Chennai Corporation in 2018, many contractors came out and said that what we alleged is true and that there is only a small specific set of contractors for whom tenders are prefixed and they have been fighting for open and transparent tenders. One such person is Chandrabose who is also a witness in the Corruption complaints given by Arappor. He has also brought out with videos how Corporation officials refuse to accept the deposit DD before the tender and they accept it only for contractors whom they prefix. He gets a envelope thro registered post from Corporation for his residence on 06/02/2020 and for his other property on 05/02/2020. The envelope contains 3 letters namely 1. Deoccupation notice asking him to vacate his residence in 15 days dated 04/02/2020 2. Lock and seal and demolition notice dated 29/01/2020 and 3. Notice calling for approved plan dated 08/01/2020. All three original notices sent together in one post. Normally, the procedure is that the Corporation seeks plan copy and if the plan copy is not available then they will send lock and seal and demolition notice. And then deoccupation notices are sent. Even though he possesses a valid plan approval for both his properties, he has been served all 3 together at one go. Inorder to fabricate and create records that these notices have been served earlier, Corporation officials came to his residence on 04/02/2020, pasted the notice on the gate, took photographs of it, tore it away and ran away. However, they were not aware that the 3rd eye CCTV inspired by Commissioner of Police will catch it. The violators of the law were caught red handed on CCTV. Here is the video. Chandrabose has been threatened that his 17 year old house with plan approval will be demolished if he remains a witness in Arappor’s complaint. The Madras High court has given an interim stay on the notices. Chandrabose has also written to the Directorate of Vigilance and AntiCorruption (DVAC) seeking protection and action on officials. Will DVAC act or will they succumb to pressure ?